#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. சூப்பர்.. கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரேயா...! வைரலாகும் வீடியோ இதோ...
சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து பிரபலமானவர்கள். தொடரில் கணவன் மனைவியாக நடித்து வந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்ரேயா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சித்து விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இந்த ஜோடிகள் , இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. ஆனால் ஸ்ரேயா உண்மையாகவே கர்ப்பமாக இல்லை...ஒரு விளம்பரத்திற்காக கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா மேக்கப் செய்துள்ளார். இந்த உண்மை தெரியாத ரசிகர்கள் சிலர் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ காட்சி...