"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
அம்மா வந்தா கூட ஓகேதான்! அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து செந்தூர பூவே சீரியல் நடிகை போட்டுடைத்த ஷாக் தகவல்!!

விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ நிதி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு மலர்வாடி என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பின்னர் அவர் மலையாளத்தில் சயபென்சில் என்ற படத்திலும், தமிழில் நாங்களும் நல்லவங்கதான் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்தே அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி என்ற தொடரில் நடித்து பிரபலமானார். பின்னர் ரஞ்சித்துடன் இணைந்து விஜய் டிவியில் செந்தூரப்பூவே தொடர்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீ நிதி சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வது குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பள்ளியில் படிக்கும்போது பெரிய நடிகரின் படம் ஒன்றில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் பல கனவுகளுடன் சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளனர். மேலும் அவர்கள் பொண்ணு இல்லன்னா கூட பரவாயில்லை, அம்மா வந்தாலும் ஓகே என கூறினர். அதனை கேட்டு எனது அம்மா பேரதிர்ச்சி அடைந்தார் என கூறியுள்ளார்.