#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலங்கள் சீரியல் மூலம் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீவித்யாவின் தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா??
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் கடந்த 2003ம் ஆண்டு துவங்கி ஐந்து வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பான தொடர் கோலங்கள். இத்தொடரில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா.
இவர் கோலங்கள் சீரியல் மட்டுமின்றி சிவசக்தி, முந்தானைமுடிச்சு, ஆனந்தம், தென்றல் உள்பட பல சீரியல்களிலும் ஹீரோயினாக, தோழியாக, வில்லியாக பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அத்தகைய தொடர்கள் ஒளிபரப்பாகும் காலங்களில் அவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
ஸ்ரீவித்யா சின்னத்திரை தொடர்களில் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது உறவினரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். மேலும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட அவர் கிளவுட் கிச்சன் அடிப்படையில் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் பேச்சுலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து கொடுத்து தரும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.