மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் அப்பா வயதுள்ள அவர் என்னிடம் என்ன செய்தார் தெரியுமா? வைரமுத்து மீது தொடரும் பாலியல் குற்றசாட்டு.!
கவியரசர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் மீது மேலும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்
அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் எஞ்சினியராக பணிபுரிந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையும் பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நான் என் அம்மாவுடன் சென்னைக்கு வந்து சவுண்ட் எஞ்சினியர் பணியை தேடினேன்.
இந்த நிலையில் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் என் வேலை குறித்து கேட்க என் அம்மாவுடன் நான் சென்றிருந்தேன்.
என் அம்மாவை அவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தார். என்னை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகம் செய்து எனக்கு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே ஒருசில நாட்கள் கழித்து என்னை ரஹ்மானிடம் அறிமுகம் செய்தார் வைரமுத்து. ஆனால் அதன்பின்னர் அவருடைய தொல்லை ஆரம்பமானது. என்னை காதலிப்பதாகவும், என்னை மனதில் வைத்து தான் பல கவிதைகள் எழுதி வருவதாகவும் தெரிவித்தார்.
என் அப்பா வயதுள்ள வைரமுத்து இவ்வாறு கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னை அவர் பலமுறை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தும் நான் பயம் காரணமாக செல்லவில்லை, யாரிடமும் இதனை நான் சொல்லவில்லை.
இப்போது அவர் மீது ஒருசிலர் குற்றச்சாட்டுக்களை தைரியமாக கூறி வருவதால் நானும் சொல்கின்றேன்' என்று கூறியுள்ளார்.