மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னிந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாலிவுட் நடிகர்..
பாலிவுட்டில் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷாஹித் கபூர். இவர் பல படங்களில் நடித்ததோடு மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.
மேலும் சாகித் கபூர் 'இஷ்க் விஷ்க்' எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். முதல் படமே வெற்றியடைந்து அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன் பின்பு இந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி அடைந்தார்.
இது போன்ற நிலையில், ஷாஹித் கபூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார். அவர் கூறியதாவது, "தென்னிந்திய மக்கள் பாலிவுட் திரைப்படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள்.
அவர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களையும் ரசிக்கிறார்கள். இதைப் போன்றே தென்னிந்திய மக்களும் பாலிவுட் திரைப்படங்களை பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று தென்னிந்திய மக்களுக்கு சாகித் கபூர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.