#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடிடியில் சாதனை படைத்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்.!
பிரபல தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகிய வசூல் ரீதியாக 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மேலும் இந்த படத்தில் ப்ரியா மணி, யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஜவான் திரைப்படம் படைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த திரைப்படத்தை ஒரு கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.