மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்.!
பிகே, 3 இடியட்ஸ், எம்பிபிஎஸ் முன்னாபாய் ஆகிய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள திரைப்படம் தான் டங்கி. ஷாருக்கான், டாப்ஸி, விக்கி, கவுசில், விக்ரம், அனில் குரோவர், கோச்சார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் எதிர்வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகயிருக்கிறது. ஷாருக்கான், டாப்ஸி உள்ளிட்ட 5 நண்பர்கள் பஞ்சாபிலிருந்து விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த விதமான ஆவணங்களுமில்லாமல் திருட்டுத்தனமாக லண்டனுக்கு வேலை செய்வதற்காக செல்பவர்களாக நடித்துள்ளனர்.
ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்ற இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தொடர்பான பணிகளை ஷாருக்கான் ஆரம்பித்திருக்கிறார். அதன் ஒரு கட்டமாக, துபாய் சென்றுள்ள அவர் அங்கு ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.