திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயின் ஷாஜகான் பட நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியலையே.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!?
தமிழில் ஒரு திரை ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர்களாக மாறும் நடிகர், நடிகைகள் பலர் இருந்து வருகின்றனர். இதன்படி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானவர் ரிச்சா பலோட். தனது 16 வயது முதல் மாடலிங்கிலும், விளம்பர படங்களிலும் நடித்து நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதன்முதலில் இந்தியில் லாமே என்ற படத்தின் மூலம் 1991 ஆம் ஆண்டு கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒரு சில இந்தி படங்களிலும், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ரிச்சா பலோட், தமிழில் தனது முதல் படத்திலேயே ஹீரோயினாக அறிமுகமானார்.
2001 ஆம் வருடம் ரவி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் ரிச்சா பலோட்.
ஷாஜகானை தொடர்ந்து அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங், காதல் கிறுக்கன், யாகாவாராயினும் நா காக்க போன்ற திரைப்படங்களில் கதநாயாகியாக நடித்தார். இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவர் திறையிலிருந்து விலகி விட்டார். இது போன்ற நிலையில் தற்போதைய இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஷாஜகான் பட நடிகையா இது என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.