திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. ஷாஜஹான் பட நடிகையா இது.! இப்போ எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!! சர்ப்ரைஸ் புகைப்படங்கள்!!
தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தை ரவி இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் விஜய் காதலிக்கும் பெண்ணாக ஹீரோயினாக நடிகை ரிச்சா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகை ரிச்சா அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங், காதல் கிறுக்கன், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் மட்டுமன்றி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் கடந்த 2011ம் ஆண்டு ஹிமன்ஷூ பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். திருமணத்திற்கு பின் சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகிய நடிகை ரிச்சா அவ்வப்போது விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். இந்த நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் தற்போதும் நடிகை ரிச்சா செம யங்காக, கிளாமராக இருப்பதாக கூறி வருகின்றனர்.