53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கொரோனா குறித்து கிண்டல்! சர்ச்சை வீடியோவால் வச்சு செய்த ரசிகர்கள்! பகிரங்கமாய் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் டெல்லி மற்றும் தென் மாநிலமான தெலுங்கானாவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்திய மக்கள் அனைவரும் பெரும் பீதியில் உள்ளனர்.
ஆனால் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சார்மி கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது குறித்து, எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் டெல்லி மற்றும் தெலுங்கானாவிற்கு வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Shame on @Charmmeofficial 😡 comments about#coronavirusindia @cpcybd @cyberabadpolice @KTRTRS@TelanganaDGP plz take serious action against #CharmmeKaur
— Kranthi Reddy (@kranthireddy146) March 3, 2020
Janalu bayapadtunte eme happy feel autundi 🙄 #CoronavirusReachesDelhi #CoronavirusReacheshyderabad pic.twitter.com/JRoXRXczxg
இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவரை மோசமாக திட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அந்த வீடியோவை நீக்கிவிட்டு, அந்த வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்வுப்பூர்வமான விஷயத்தில் பக்குவம் இல்லாமல் நடந்துகொண்டுள்ளேன். இனிமேல் எனது நடவடிக்கைகளில் கவனமாக இருப்பேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.