மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனிற்காக காவல்துறையிடம் கெஞ்சிய ஷாருக்கான்.. வெளியான பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி.?
பாலிவுட் திரையுலங்கள் பிரபல நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் இந்தி மொழியில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவரது வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
மேலும் ஷாருக்கான் நடிப்பின் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இது போன்ற நிலையில், ஷாருக்கான் காவல்துறை அதிகாரியிடம் கெஞ்சினார் என்ற செய்தி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து போதை பொருளை கையில் வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜவான் திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த ஷாருக்கான் விவரம் தெரிந்த உடனே மும்பைக்கு திரும்பி தன் மகனை சந்தித்தார்.
இதனால் மனமுடைந்து போன ஷாருக்கான் தன் மகன் வெளியே வர வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிவிடம் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி கெஞ்சி இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.