96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஏமாற்றமான செயல்.. மன்னிச்சுடுங்க! ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் ஷாருக்கான்!! ஏன்னு பார்த்தீர்களா!!
ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 5வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தும் ரோஹித் ஷர்மா 43 ரன்கள் எடுத்தும் சிறப்பாக விளையாடி வந்தனர். அவருக்கு பின் இறங்கியவர்கள் சொதப்பலாக விளையாடிய நிலையில் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது. கொல்கத்தா அணி எளிதில் வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021
இந்நிலையில் இதுகுறித்து பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாரூக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில், ஏமாற்றமளிக்கக்கூடிய செயல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் சார்பாக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.