திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா.?
ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நாளை ஜவான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்களில் வெளியாகிய ஜவான் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் 65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.