#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சில்வர் உடையில் 'சிக்' என இருக்கும் சிவாஜி பட நாயகி... இன்ஸ்ட்டா புகைப்படங்கள்... ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு.!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலிங்காகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். 2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாகி தமிழ் சினிமா மார்க்கெட்டில் இவருக்கு என்ன ஒரு இடத்தை தக்க வைக்க உதவியது.
இதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த இவர் மிட் நைட் சில்ட்ரன் என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றார். ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மாடலிங் துறையில் பிஸியாக இருந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி வரும் ஸ்ரேயா சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில்வர் நிற ஃபேஷன் உடையில் இவர் பதிவு செய்திருக்கும் புகைப்படங்களை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.