மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களுக்கு ஹிந்தியில் பேச தெரியுமா?? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் கொடுத்த நெத்தியடி பதில்!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர் ஸ்ருதி ஹாசனிடம், தென்னிந்தியாவிலிருந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஹிந்தி பேசத் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி, தென்னிந்தியா என்ன வேறு கிரகத்திலா உள்ளது. நாங்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறோம். கடுமையாக உழைக்கிறோம். 2022ல் இனம், மொழி உட்பட பாரபட்சம் பார்ப்பதற்கு நேரம் இல்லை என கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் லக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ராமையா வஸ்தாவயா, டிடே, கப்பார் இஸ் பேக் போன்ற ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.