திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இயக்குனர் பார்த்திபனின் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமா துறையில் பிரபலமான நடிகையாக அறியப்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
தற்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் நீண்ட இடைவேளை எடுத்து கொண்ட ஸ்ருதிஹாசன், பார்த்திபன் இயக்கத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இச்செய்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.