#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்ருதிஹாசனிற்க்கு திருமணமா.? வெளியான வதந்தியால் கடுப்பான ஸ்ருதி ஹாசன்..
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். சிறுவயதில் இருந்து திரைத்துறையில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், கதாநாயகியாக முதன் முதலில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு பின் தொடர்ந்து திரைத்துறையில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவர் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருந்து வருகிறார். இவ்வாறு பல திறமைகளை கொண்ட ஸ்ருதிஹாசன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று இணையத்தில் செய்தி வெளியானது.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது "என் வாழ்க்கையை குறித்து ஒவ்வொரு விஷயத்திலும் வெளிப்படையாக இருக்கும் நான் திருமணம் ஆனதை ஏன் மறைக்கப் போகிறேன். என்னை பற்றி தெரியாதவர்கள் அமைதியாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.