#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எல்லாவற்றையும் மறக்க ஆசைப்படுகிறேன்" ஸ்ருதிஹாசனின் உருக்கமான பதிவு..
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவரது மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
முதன் முதலில் 'ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த ஸ்ருதிஹாசன் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க துவங்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் திரைத்துறையில் கலக்கி வருகிறார்.
இது போன்ற நிலையில், ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் எல்லாவற்றையும் மறக்க ஆசைப்படுகிறேன். எழுந்து நின்று கத்த வேண்டும் போல் தோன்றுகிறது" என்பதை குறிப்பிட்டு புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவை பார்த்த ரசிகர்கள் என்ன நடந்தது என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.