ஆளுநர் கையால் விருது வாங்கினர் நடிகை ஸ்ருதிகாசன். எதற்காக தெரியுமா?



Shruthi hassan got award from dr kiranbedi for excellence in cinema and entertainment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் நமது கமலஹாசன் வெறும் நடிகர் மட்டும் அல்ல. மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு ஸ்ருதிகாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருமே தந்தையைப்போல சினிமாவிற்குள் வந்து தனி தனியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர் ஸ்ருதிகாஷன். அதை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ஸ்ருதிகாஷன்.

இந்நிலையில் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான சிறந்த பெண்மணிக்கான விருதினை பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடி அவர்களிடம் இருந்து பெற்றுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு இதனை நினைத்து பெருமை படுவதாகவும் நடிகை ஸுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.