திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"மாதவிடாய் நேரத்தில் இந்த மாதிரி விஷயங்களை பண்ணாதீங்க" ஆண்களுக்கு அறிவுரை கூறிய ஸ்ருதிஹாசன்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் இருந்து வருகிறார்.
மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், முதன் முதலில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிக்க மீண்டும் கமிட் ஆகியுள்ளார். இது போன்ற நிலையில் சமீபத்தில் பிரபல யூ ட்யூப் சேனலிற்க்கு பேட்டி அளித்து வந்த ஸ்ருதிஹாசன் பல விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
இவர் கூறியதாவது "பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வாங்கும் நாப்கின்களை ஏன் கருப்பு பேப்பரில் போட்டு சுற்றி தருகிறார்கள். அது என்ன தவறான விஷயமா? ஆணுறையை கூட வெளிப்படையாக வாங்குகிறார்கள். நாப்கின் வாங்க அவ்வளவு கஷ்டமா என்று கூறியிருக்கிறார். மேலும் நாப்கின் வாங்குவதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றும் ஆண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.