தம்பியை போல் முஸ்லீமாக மாறினாரா சிம்பு.? இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட சிம்பு!



simbu-attends-the-ifthaar-party-of-iuml

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக இந்த படங்களிலும் நடிக்காமலிருந்த சிம்பு தனது உடல் எடையை குறைத்து மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ளார்.

simbu

தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரியன் உதிக்கும் முன்னரே நோன்பிருந்து தண்ணீர் கூட குடிக்காமல் சூரியன் மறைவதற்கு முன் தங்களது நோன்பை திறப்பார்கள். இது இஸ்லாமியர்களால் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

இந்நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காயிதே மில்லத் பேரவை சார்பாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

simbu

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இஸ்லாமிய மக்களுடன் அமர்ந்து புனித ரமலான் நோன்பு திறந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவான யூத் லீக் அமைப்பின் மாநிலச் செயலாளர் புரசைவாக்கம் அன்சாரியும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் இவரின் தம்பி  குறளரசன் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த  பெண்ணை திருமணம் செய்து முஸ்லிமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.