திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் சிம்பு.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான கதையை அவர் ஏற்கனவே எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு ஏற்கனவே வல்லவன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வரும் நிலையில், தற்போது சிம்புவும் அதே பாணியில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கிய நடிக்க போகிறார்.