மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பத்து தல திரைப்படம் வெற்றியடைய சிம்பு ரசிகர்கள் செய்த வெறித்தனமான செயல்.. அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்.!?
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி சிம்பு ரசிகர்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாகவுள்ள திரையரங்குகளுக்கு முன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
மேலும், சிம்புவின் பத்து தல படம் வெற்றி பெற புதுவையில் காலாப்பட்டி என்ற பகுதியிலுள்ள தம் லிட்டில் சிம்பு ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக சினேகா முதியோர் காப்பகத்தில் புதுவை சிம்பு தலைமை மன்றத்தின் ஆதரவுடன் காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் முட்டையுடன் மதிய உணவு வழங்கினர்.
மேற்படி நிகழ்ச்சியில் ரசிகர்மன்ற நிர்வாகிகள் வேல்ராஜ், ரமேஷ், தண்டபாணி, கோவிந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் படம் வெளியாகும் அன்று பள்ளி மாணவர்களுக்கு பேனாஃப், பென்சில், நோட்டு, புத்தகம் வழங்க திட்டமிட்டுள்ளனர். 'பத்து தல' திரைப்படம் வெற்றி பெற ரசிகர்கள் பல செயல்களை செய்து வருகின்றனர்.