பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வியர்க்க வியர்க்க கொளுத்தும் வெயிலில் வெறியுடன் நிற்கும் சிம்பு.. காரணம் என்ன?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போட்டோ..!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". இப்படத்தில் முத்து எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களுக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன், சிம்பு ஆகிய மூவரும் கூட்டணியில் மூன்றாவது முறையாக மீண்டும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். மேலும் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் தாயாக நடிக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணிக்குள் நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளது. இதில் ரயில் நிலையத்தில் சிம்பு நிற்கும் போட்டோ மற்றும் காட்டுக்குள் வாங்கு கம்புடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.