மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ! அதுவும் யார்கிட்ட எப்படி புலம்புகிறார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சிம்பு. அதனைத் தொடர்ந்து உடல் எடை அதிகரித்த நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. பின்னர் சிம்பு தனது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
பின்னர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு காதலர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தனது வளர்ப்பு நாயிடம், நீ ஒரு பெண். நீ வளர்ந்து ஒரு ஆணிடம் பழக வேண்டும். அதெல்லாம் உனக்கு நடக்கணும்னா முதலில் எனக்கு திருமணமாக வேண்டும். அப்போதான் நீ ஜாலியா இருக்கலாம். அதனால் நீ இரவு முழுவதும் அமர்ந்து எனக்கு திருமணமாக வேண்டும் என பிரார்த்தனை செய் என கிண்டலாக புலம்புவதை போல பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.