மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதாநாயகிக்காக சிம்பு செய்த வம்பு... கலக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர்!
தமிழ் சினிமாவின் முந்தானை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. மாநாடு திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த இவர் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நாயகியை கதாநாயகியாக முடிவு செய்த கமல் தீபிகா படுகோனே இடம் பேசி இருக்கிறார். நடிக்க சம்மதித்த அவர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டதால் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் கமல்.
இதனைத் தொடர்ந்து தமிழ் கதாநாயகிகளையே ஒப்பந்தம் செய்யலாம் என கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கிறது. இதனை கேள்விப்பட்ட சிம்பு தனக்கு பாலிவுட் கதாநாயகி தான் வேண்டும் என ஒற்றை காலில் நின்றுதால் வேறு ஏதேனும் லோ பட்ஜெட் கதாநாயகி கிடைக்கிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறது படக் குழு.