#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியால் அடித்திருக்கும் ஜாக்பாட்; விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகை!!
சுமாரான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து ஓரளவிற்கு ரசிகர்களிடையே பிரபலமாகிக் கொண்டிருந்தவர் ஜனனி ஐயர். இவர் நடிப்பில் வெளியான அவன் இவன், தெகிடி போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் விஜய் டிவியில் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 2 வில் ஜனனி ஐயர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த சீசனில் இறுதிச் சுற்றுக்கு தகுதியான முதல் போட்டியாளர் ஆவார்.
பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்துள்ள ஜனனி ஐயருக்கு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசன் முடிந்து வெளியில் வரும் அவருக்கு இயக்குனர் சிம்புதேவன் ஒரு அதிர்ச்சியை கொடுக்க காத்திருக்கிறார். இவர் விஜயின் புலி படத்தினை இயங்கியவர் ஆவார்.
சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். வழக்கம் போல வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் – பிரேம்ஜி, வைபவ், ஜெய், சிவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.