மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகனா! அடுத்த ஹீரோ ரெடி! எவ்ளோ கியூட்டா இருக்காரு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து, எக்கசக்கமான ரசிகர்களை கொண்டு டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து பிரபலங்களுடனும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பின் அவர் தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அதீப், ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
சிம்ரன் துணை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி வில்லியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தனது முதல் மகனின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் நன்கு வளந்துட்டாரே! அடுத்த ஹீரோ ரெடி என கூறி வருகின்றனர்.