மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தகதகதகவெனஆடவா.! சிம்ரனின் குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ.!?
தமிழ் சினிமாவில் 90களில் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். பல ரசிகர்களுக்கு கனவு கன்னியாக இருந்து வந்தார் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழில் முதன் முதலில் பிரபு தேவா நடிப்பில் வெளியான 'விஐபி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், பூவே பூச்சூடவா, அவள் வருவாளா, ஜோடி, வாலி, பஞ்சதந்திரம், துள்ளாத மனமும் துள்ளும், போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.
இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா விக்ரம் நடிப்பில் வெளியான 'பிதாமகன்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப்பெரும் பாராட்டை பெற்றது. இப்படத்தில் சிம்ரன் தக தகவென ஆடவா என்ற பாட்டிற்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் மிகப்பெரும் வெற்றி பாடலாக அமைந்தது.
இது போன்ற நிலையில், தற்போது சிம்ரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாடலுக்கு பயங்கரமாக குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சிம்ரன் ரசிகர்களும் குத்தாட்டம் போட்டு துள்ளி குதித்து வருகின்றனர்.