மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இந்த கேரக்டர் தான் என் ஆசை" - மனம் திறந்த சிம்ரன்.!
90-களின் இறுதி மற்றும் 2000-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை சிம்ரன். இவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்று கூறலாம் ன. ஹிந்தி சினிமாவின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிம்ரன் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .
தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் அசத்தலான நடனத்தால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவரது நடிப்பில் வெளியான வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், நியூ போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கிய இவர் தனது பள்ளிப் பருவ காதலனை திருமணம் செய்த பின் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எந்த படம் மற்றும் கதாபாத்திரத்தில் மிகவும் நடிக்க விரும்பினீர்கள் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் சிம்ரன்.
இது தொடர்பாக பதிலளித்துள்ள அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக தெரிவித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளியானது. சிம்ரன் நடிக்க விரும்பிய நந்தினி கதாபாத்திரத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.