மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சித்தா பட பாடலால் உலகளவில் பிரபலமடைந்த பாடகி!" யார் தெரியுமா.?
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'சித்தா'. இந்தப் படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார்.
5கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் உலகளவில் பல திரையரங்குகளில் வெளியாகி 30 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் சிட்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், பேபி சஹஸ்ர ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற "உனக்கு தான்" பாடலில் வரும் "என் பார்வை உன்னோடு" என்ற பாடல் வரிகளை சாரா பிளாக் என்ற பாடகி பாடியிருந்தார்.
மேலும் இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். இதுவரை 1.9 கோடி பேர் அவரது பக்கத்தில் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளதால், மேலும் பல லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என்பதால் சாரா உலகில் பிரபலமடைந்துள்ளார்.