ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மெரீனாவிற்கு முன்பே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்தாரா! அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா? வைரலாகும் டீசர்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்ளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய அவரது கலகலப்பான பேச்சிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.
பின்னர் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் இயக்குனரும் நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனை கண்ட நெட்டிசன் ஒருவர்
ஏன் இந்த குறும்படத்தை வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், இது குறும்படம் இல்லை. நான் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியிருந்தால் அதுதான் அவருடனான என்னுடைய அறிமுகப் படமாக இருந்திருக்கும்.நான் அந்தப் படத்தைக் கைவிட்டு விட்டேன். அவர் மெரினா படத்தில் நடித்தார். குறல் 786-ல் அவருடைய கதாப்பாத்திரம் சிறப்பானது. ஆனால், அவர் அந்த கதாபாத்திரம் இல்லாமல் கமர்சியல் ரீதியிலான வெற்றிப் படங்களைச் சிறப்பாக செய்து வருகிறார் என பதிலளித்துள்ளார்.
Not a short film! Meant to be my debut directorial with #SivaKarthikeyan, I was supposed to introduce him. After I dropped the project he did #Marina. His character in #kurahl786 had so much scope. But, he did great with respect to commercial success without that :) https://t.co/0bxfQJnWBA
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 12, 2020