மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த தப்புக்காக, நடிகர் பிரேம்ஜியிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்!! ஏன்? என்னாச்சு?
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனையும் படைத்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் மாடல் அழகி மரியா நடித்து வருகிறார். மேலும் இதில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மீண்டும் வில்லனாக பிரேம்ஜி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் SK20 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. பிரின்ஸ் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் உலக உருண்டையுடன் உள்ளார். இதனை சிவகார்த்திகேயன் நடிகர்கள்,இயக்குனர்,தயாரிப்பாளர் என அனைவருக்கும் டேக் செய்துள்ளார்.
அதனை கண்ட பிரேம்ஜி, சார் எனது பெயரை தவறாக டைப் செய்துள்ளீர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் 'சாரி சார், அடுத்த முறை கண்டிப்பாக சரியாக டேக் செய்கிறேன்' என பதிலளித்துள்ளார்.