திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. சும்மா அதிருதே.! ரசிகர் படையை திரட்டி கெத்து காட்டும் சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி பிரபலங்களாக ஜொலிப்பவர் ஏராளம். அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கிய அவர் தீராத முயற்சியால், கடின உழைப்பால் தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கிறார்.
சிவகார்த்திகேயன் அயலான் படத்தை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் தளபதி விஜய் தான் அரசியலில் களமிறங்குவதால் சினிமாவில் இருந்து விலகபோவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன்தான் அடுத்த தளபதி என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அண்மையில் சென்னையில் பிரம்மாண்டமாக தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் சிவகார்த்திகேயனின் மாஸான ரசிகர் படையைக் கண்டு கோலிவுட்டே அதிர்ந்துள்ளது.
— SKFC Videos (@SKFC_Videos) March 12, 2024