மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. அதுக்குள்ள இப்படி ஆகிருச்சே! திடீரென நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டான் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஷூட்டிங் தொடங்கிய 3 நாட்களிலேயே திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பற்றிய காரணங்கள் எதுவும்
அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.