மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. குட்டீஸ்களின் பேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு.! இத்தனை கோடிகளா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் சினிமாவிற்குள் இரண்டாவது நாயகனாக நுழைந்து பின் ஹீரோவாக அவதாரமெடுத்து தனது தீராத முயற்சியால், கடின உழைப்பால் தற்போது டாப் ஸ்டாராக வலம் வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் அமரன் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் கடந்த 13 ஆண்டுகளில் 22 படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. 2012 ஆம் ஆண்டு மெரினா படத்திற்காக 10,000 சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார். இந்நிலையில் ஹீரோ, தயாரிப்பாளர், பாடலாசிரியராக வலம்வரும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சென்னை, சொந்த ஊரில் சொந்தமாக பிரம்மாண்டமான வீடுகள் மற்றும் ஆடி, BMW, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.