மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இவ்வளவா?? கேட்டா ஷாக்காகிடுவீங்க!!
சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக, தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமான சிவகார்த்திகேயன் பின்னர் தனது விடா முயற்சியால், கடின உழைப்பால் முன்னேறி தற்போது மாபெரும் முன்னணி நடிகராக கொடி கட்டி பறக்கிறார். அண்மையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டாக்டர்.
இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான், அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக ஜதி ரத்னலு தெலுங்கு படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் அனுதீப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கவுள்ளது.
மேலும் இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் SK20 படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 25 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.