திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நான் ஓய்வு பெறுகிறேன்.! சிவகார்த்திகேயன் எடுத்துள்ள அதிரடி முடிவு.! வெளிவந்த அறிவிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் தனது திறமையால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். அவரது படங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். மேலும் நடிகை சிவகார்த்திகேயனுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் அவர் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், என் அன்பு சகோதர சகோதரிகளே, சிறிது காலம் நான் ட்விட்டரில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளேன். விரைவில் திரும்பி வருவேன். எனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை எனது குழுவினர் வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் ஏன் இந்த திடீர் முடிவு என ஷாக்காகியுள்ளனர்.