திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியுடன், விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்.! கண்ணீர் மல்க அஞ்சலி!!
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு நாடு முழுதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். மேலும் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத பலரும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.