திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காஷ்மீரில் சூட்டிங்... பேக்கிங்கில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி... பரபரப்பாக தயாராகி வரும் ராஜ்கமல் புரொடக்ஷன் படப்பிடிப்பு.!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவரது நடிப்பில் உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது சிவ கார்த்திகேயன் உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி. பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி இந்த திரைப்படத்தின் கதையானது நாட்டிற்காக உயிர் நீத்த ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான சூட்டிங் காஷ்மீரில் தான் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழுவினர் காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.