மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிகவும் பிரபலமான கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள சிவகார்த்திகேயன்... எங்கு தெரியுமா.? புகைப்படம் இதோ...
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் தனது கடின உழைப்பால் தீராத முயற்சியால் வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான், டாக்டர், பிரின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனையும் படைத்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருக்கும் போதே தனது மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன்தாஸ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் மிகவும் பிரபலமான கோவிலான திருக்கடையூர் கோவிலுக்கு சிமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.