மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் - முருகதாஸ் திரைப்படம்.. வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்பைடர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில், படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.