திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் சிவகார்த்திகேயன்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆரம்ப கட்டத்தில் சின்ன திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்த சிவகார்த்திகேயன் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தமிழில் முதன் முதலில் 'மெரினா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், சமீபத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. இதனால் இவரது ரசிகர்களும் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
இது போன்ற நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'அயலான்'. படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல வருடத்திற்கு பின்பு நிறைவடைந்து திரையரங்கில் வெளியாக உள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனிற்கும், அவரது குடும்பத்திற்கும் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.