#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜி.வி. ப்ரகாஷிற்காக சிவகார்த்திகேயன் செய்துள்ள காரியம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் GV பிரகாஷ். பிரபல இசை அமைப்பாளரான இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.
சர்வம் தாள மயம் படத்தை தொடரந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 100 % காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4ஜி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
இந்த வரிசையில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் வாட்ச்மேன் படம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.
ஆக்ஷன் திரில்லர் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.