மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்! என்ன தெரியுமா? அம்மணி வேற லெவல்!!
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. இவரது பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவரும். இவர் பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாவார். அதனை தொடர்ந்து ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் மேலும் பிரபலமானவர்.
கீச் குரலை வைத்து சிறுபிள்ளை போல வெகுளிதனமாக அவர் பேசும் பேச்சும், அங்குமிங்கும் ஓடி அவர் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. அதனை தொடர்ந்து தற்போது ஷிவாங்கிக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
அவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தற்போது அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ஆர்டிகல் 15 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாக்கியுள்ளாராம். இந்த தகவல் வெளியாகி ஷிவாங்கி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.