மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவாங்கி பிக்பாஸ் செல்கிறாரா.? வெளியான வீடியோவால் ரசிகர்கள் ஆச்சர்யம்..
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை மனதில் இடம்பிடித்துள்ளார். இவரது பாடலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கியின் சேட்டைகள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இந்நிகழ்ச்சி பிரபலமாக பேசப்பட்டு வருவதற்கு இவர்களும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
தற்போது சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார் சிவாங்கி. சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் கன்ஃபெக்சன் ரூமில் உட்கார்ந்து பேசுவது போல் இருக்கிறது. இதனால் சிவாங்கி பிக் பாஸ் செல்கிறாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.