#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹீரோயினா நடிப்பீங்கனு எதிர்பார்த்தா இப்படியா?? அட்வைஸ் செய்த ரசிகருக்கு ஷிவானி அளித்த கூல் பதில்!!
சின்னத்திரையில் இருந்து பலரும் கடின உழைப்பால், தீராத முயற்சியால் வெள்ளித்திரையில் களமிறங்கி முன்னணி பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவ்வாறு தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியவர்தான் ஷிவானி. விஜய் டிவியில் பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
ஆனால் சில காரணங்களால் அந்த தொடர்களிலிருந்தும் அவர் பாதியிலேயே விலகினார். பின்னர் ஷிவானி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் ரீச்சானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவியத் துவங்கியது.மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக நடித்திருந்தார்.
மேலும் படத்தில் ஷிவானி பத்து நிமிடம் கூட வராதநிலையில், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் பிக்பாஸ்க்கு பின் நீங்கள் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டோம். இப்படி சிறிய ரோலில் கிடையாது. இனியாவது புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு ஷிவானி உங்களது அக்கறைக்கு நன்றி. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க மிகவும் கடினமான முயற்சி மேற்கொள்ளும் சாதாரண பெண்தான் நான். முயற்சிக்கு அதிக உழைப்பு மற்றும் பொறுமை முக்கியம். இதன் மூலம் நான் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். எனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்யவே முயல்வேன். இதுதான் ஆரம்பம். இன்னும் நிறைய தூரம் உள்ளது என கூறியுள்ளார். இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.