மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதியுடன் சந்திப்பு! செம குஷியாக பிரபலத்துக்கு நன்றி கூறிய ஷிவாங்கி! யாருக்குனு பார்த்தீங்களா!!
விஜய் டிவியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி. அதன் மூன்றாவது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமாக இருப்பவர் ஷிவாங்கி.
இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளார். மேலும் ஷிவானிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவர் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் நடித்துள்ளார்.
தீவிர விஜய் ரசிகையான அவர் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர், இது ஜாலியோ ஜிம்கானா செட்டில் நடந்தது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணா நன்றி என கூறியுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யை சந்திக்க சிவகார்த்திகேயன்தான் ஏற்பாடு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அப்புகைப்படம் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.