பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
பருத்திவீரன் திரைப்படத்தை வாங்க வேணாம்னு சொன்னதே அவர்தான்.! உண்மையை உடைத்த பிரபலம்.!
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன், இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகர் கார்த்தி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் கார்த்திக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்டபோது அமீருக்கும், திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில், இயக்கியிருந்தார். ஆனாலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட பட்ஜெட் அதிகமானதோடு, படப்பிடிப்பு 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்ததால் ஞானவேல் ராஜா அமீர் உள்ளிட்டோரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அப்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக இயக்குனர் அமீர் குற்றம் சுமத்தியிருந்தார்.
அதோடு, இந்த திரைப்படத்தை அமரிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனாலும் இந்த திரைப்படத்தை தயாரித்ததோடு, அந்த திரைப்படத்தின் அனைத்து உரிமைகளும் அமீரின் பெயரில் தான் இருக்கிறது. இந்த விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூதாகரமானது. மேலும் ஞானவேல் ராஜா, அமீரை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, அவரை திருடன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் திரைத்துறையை சார்ந்த பலரும் அமீருக்கு ஆதரவாக ஞானவேல் ராஜா மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்ததோடு, அவரை விமர்சனம் செய்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து தற்போது தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர்தான் சிவசக்தி பாண்டியன். அப்போது இந்த திரைப்படத்தின் உரிமையை அமிரிடமிருந்து சிவசக்தி பாண்டியன் வாங்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அப்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த ராம. நாராயணன் இந்த திரைப்படத்தின் உரிமையை யாரும் வாங்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார் என கூறிய சிவசக்தி பாண்டியன், நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமாரே தொலைபேசி வாயிலாக அந்த திரைப்படத்தின் உரிமையை வாங்க வேண்டாம் என கூறியதாக தெரிவித்திருக்கிறார் சிவசக்தி பாண்டியன்.
இதன் காரணமாக, பருத்திவீரன் திரைப்பட சர்ச்சை மறுபடியும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்னதாக அமீர் பற்றி தவறாக பேசியதற்கு ஞானவேல் ராஜா மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு கரு பழனியப்பன், சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.