மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய காதல் உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வார் விக்னேஷ் சிவன் - எஸ்.ஜே.சூர்யா.!
தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இதனிடையே இவர் சமீபத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா பேசியதாவது, புதிய காதல் உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் விக்னேஷ் சிவன் ஆர்வமாக உள்ளார். எல் ஐ சி பட தலைப்பை போலவே படமும் வித்தியாசமாக இருக்கும். நேற்று கிட்டத்தட்ட 12 மணி நேரமாக திரைப்படம் குறித்து உரையாடிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.